செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2017 (16:30 IST)

தனது மரணத்தை வீடியோ எடுத்த அழகி - அதிர்ச்சி வீடியோ

உக்ரைன் நாட்டை சேர்ந்த இளம் மாடல் அழகி ஒருவர், குடி போதையில், வீடியோ எடுத்துக்கொண்டே காரில் செல்லும் போது அவரும், அவரது தோழியிம் பரிதாபமாக உயிரிழந்தனர்.


 

 
உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகி சோபியா மெகர்கோ(16).  அவர் வசிக்கும் சிரந்த் என்ற பகுதியின் அழகியாகவும் அவர் தேந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
 
இவரும் இவரின் தோழி தாச மெடவிடேவ(24) என்பவரும், கடந்த 29ம் தேதி ஒரு காரில் இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்தனர். காரை மெடவிடவே ஒட்ட, சோபியா அவர்கள் இருவரையும் செல்பொனில் வீடியோ எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரிடையாக ஒளிபரப்பினார். அப்போது இருவரின் கையிலும் மது பாட்டில் இருந்தது. போதை தலைக்கேற இருவரும் உற்சாகமாக குரல் எழுப்பியவாறு காரில் சென்று கொண்டே இருந்தனர். 
 
அப்போது திடீரெனெ எதிலேயோ கார் இடிக்கும் சப்தம்  கேட்கிறது. வீடியோவும் கட் ஆனது. இந்த சம்பவத்தை கேள்விபட்டு போலீசார் அங்கு சென்று பார்த்த போது, சோபியா சம்பவ இடத்திலேயே பிணமாக கிடந்தார். அதேபோல், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரின் தோழியும் மரணமடைந்தார்.
 
மது போதையில் வீடியோவில் பேசிக்கொண்டே காரை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருத்து தெரிவித்தனர்.