வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 14 ஜூன் 2018 (16:24 IST)

டாக்ஸியில் லெஸ்பியன் ஜோடி உல்லாசம்: நடுவழியில் இறக்கிவிட்ட டிரைவர்

அமெரிக்காவில் ஓடும் காரில் 2 பெண்கள் முத்தம் கொடுத்து எல்லை மீறி நடந்து கொண்டதால், அந்த காரின் டிரைவர்  2 பெண்களையும் கீழே இறக்கிவிட்டுள்ளார்.
 
நியூயார்க்கில் அலெக்ஸ் லோவின் (26), எம்மா பிச்ல் (24) என்ற இரண்டு லெஸ்பியன் பெண்கள் நேற்று தங்களது நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு செல்வதற்காக அகமத் ஓட்டிய உபர் கால் டாக்ஸியில் பயணித்துள்ளனர். அப்போது அந்த இரண்டு பெண்கள் ஓடும் காரில் எல்லை மீறி நடந்து உள்ளனர்.
 
இதனால் அந்த டிரைவர் இரண்டு பெண்களையும் எச்சரித்துள்ளார். ஆனாலும், அந்த இரண்டு பெண்கள் தொடர்ந்து எல்லை மீறி நடந்துள்ளனர். இதனால் கோபமடைந்த டிரைவர் இரண்டு பெண்களையும் காரில் இருந்து கீழே இறக்கிவிட்டார்.
 
இதன் பின்னர் அந்த இரண்டு பெண்களும்,  கால் டாக்ஸி விதியை மீறி வலுக்கட்டாயமாக அந்த கார் டிரைவர் தங்களை காரில் இருந்து இறக்கிவிட்டதாக கூறி உபர் கால் டாக்ஸி நிறுவனத்திடம் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அந்த டிரைவரின் லைசென்ஸ் தற்காலிகாமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.