1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2018 (13:12 IST)

இரண்டு உலக சாதனையாளர்கள் ஒரே இடத்தில் சந்திப்பு

துருக்கியைச் சேர்ந்த உலகின் உயரமான இளைஞரும், இந்தியாவை சேர்ந்த உலகின் குள்ளமான பெண்ணும் எகிப்து நாட்டில் சந்தித்தனர்.
உலகின் குள்ளமான பெண் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்தவர், இந்தியாவின் நாக்பூர் நகரை சேர்ந்த ஜோதி ஆம்கே(25).  இவரது உயரம் 2 அடி 6 அங்குலம் (62.8 செ.மீ.).  அதேபோல் உலகின் உயரமானவர் என்ற உலக சாதனையை படைத்தவர், துருக்கியை சேர்ந்த சுல்தான் கோசென்(36). இவரது உயரம் 8 அடி 9 அங்குலம்(271.3 செ.மீ) . எகிப்து நாட்டில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக உலகின் மிக உயர்ந்த மனிதரான சுல்தான் கோசெனையும்உலகின் குள்ள மனிதரான ஆம்கேவையும் தங்களது நாட்டுக்கு வரும்படி எகிப்து அரசு அழைப்பு விடுத்தது.
 
இதனை ஏற்று ஜோதி ஆம்கே மற்றும் சுல்தான் கோசென் எகிப்த்திற்கு சென்றனர். அங்கு ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். இவர்கள் இருவரும் ஒன்றாக தோன்றிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.