செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2016 (11:41 IST)

நேரடி ஒளிபரப்பின் போது இவர் என்ன செய்தார் தெரியுமா? : வீடியோ பாருங்கள்

நேரடி ஒளிபரப்பின் போது இவர் என்ன செய்தார் தெரியுமா? : வீடியோ பாருங்கள்

அமெரிக்க தொலைக்காட்சி நடிகையான கிம் கர்தஷியன், சமீபத்தில் பாரிஸ் நகருக்கு சென்றிருந்த போது, சில கொள்ளையர்கள், விலை உயர்ந்த நகைகளை அவரிடமிருந்து கொள்ளையடித்துச் சென்றனர்.


 

 
இந்த சம்பவத்தை நகைச்சுவையாக சித்தரித்து, பிரான்ஸ் நாட்டின் ஒரு தொலைக்காட்சி, 35 மணி நேர தொடர் நேரலை நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதில் சொரயா என்ற தொலைக்காட்சி நடிகை கிம் கார்தஷியனாக நடித்துக் கொண்டிருந்தார்.
 
நிகழ்ச்சி முடியும் தருவாயில், அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஒருவர், அவர் கன்னத்தில் முத்தமிட முயன்றார். ஆனால், அந்த நடிகை கன்னத்தை திருப்பிக் கொண்டார். இதனால், திடிரென அந்த தொகுப்பாளர், அவரின் மார்பில் முத்தம் இட்டார். 
 
இது நேரலையாக இருந்ததால்,  அந்த நடிகை அதிர்ச்சியைடந்தாலும் ஒரு மாதிரியாக சமாளித்துக் கொண்டார். இதைக் கண்ட பலர் கோபமடைந்தனர். அந்த தொகுப்பாளர் மீது பாலியல் தொடர்பான வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பலரும் புகார் அளித்துள்ளனர்.