திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2016 (14:02 IST)

நான் இனி தொழிலதிபர் அல்ல, அதிபர் மட்டுமே: டிரம்ப் அதிரடி!!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், அதிபர் பதவியில் மட்டும் கவனம் செலுத்த போவதாக அறிவித்துள்ளார். 


 
 
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார்.  
 
டொனால்ட் டிரம்ப்பை பொறுத்தவரை அரசியலில் தீவிரமாக ஈடுபடாதவர். ஆனால் ட்ரம்ப் திடீரென அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். 
 
டிரம்புக்கு குடியரசுக் கட்சியில் ஆதரவு பெருகியதால் அவரே அதிகாரப்பூர்வ வேட்பாளராகவும் களமிறக்கப்பட்டார். ஆனால் கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி ட்ரம்ப் அபார வெற்றி பெற்றார். 
 
இந்நிலையில், இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப், "நான் எனது சிறந்த தொழில் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் விடுபட போகிறேன். இனி எனது நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அதிபர் பதவியில் மட்டும் கவனம் செலுத்த உள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.