1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 27 ஜூலை 2017 (12:01 IST)

இனி திருநங்கைகளுக்கு ராணுவத்தில் இடம் இல்லை; டிரம்ப் அதிரடி

திருநங்கைகளுக்கு இனி அமெரிக்க ராணுவத்தில் இடம் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.


 

 
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிவியேற்ற நாள் முதல் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் நடைமுறையை முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டு வந்தார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். 
 
இந்நிலையில் தற்போது அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-
 
என்னுடைய ஜெனரல்கள் மற்றும் ராணுவ நிபுணர்களுடன் சேர்ந்து ஆலோசித்த பிறகு அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணி புரிய அரசு அனுமதிக்காது எனபதை பரிந்துரைக்கிறேன். திருநங்கைகளால் ராணுவத்தில் ஏற்படும் அதிக அளவிலான மருத்துவ செலவுகள் மற்றும் பிளவுகள் இனி இருக்காது என்று தெரிவித்துள்ளார்.