அமெரிக்க அரசாங்கத்தை இழுத்து மூடுங்கள்: டிரம்ப் ஆவேசம்!!
அமெரிக்க அரசு செலவீனங்களுக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு குறித்து செனட் அவையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
பட்ஜெட் ஒப்புதலுக்கு 60 செனட் உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு 52 செனட்டர்கள் மட்டுமே உள்ளனர்.
பட்ஜெட் ஒப்புதல்கள் தேவையான 60 செனட்டர்கள் ஜனநாயகக் கட்சியின் செனட்டர்களும் என்பதால், ஏகப்பட்ட நெருக்கடி கொடுத்துள்ளனர்.
டிரம்பின் பல கனவுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சுவர் கட்டுவதற்கு ஒதுக்க ஜனநாயகக் கட்சியினர் மறுத்துவிட்டனர். ஆனால் டிரம்ப்க்கு விருப்பமில்லாத திட்டங்களுக்கு அதிக நீதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் நமது அரசாங்கத்தை செப்டம்பர் மாதம் முடக்குவது அவசியமாகும் என்று ட்விட் செய்துள்ளார்.