செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 15 ஆகஸ்ட் 2020 (14:47 IST)

இந்தியர்கள் எனக்குதான் சப்போர்ட்; கமலா ஹாரிஸ் மோசமானவர்! - அள்ளி விடும் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள ட்ரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ ஃபிடன் மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை தொடர்ந்து தாக்கி பேசி வருகிறார்.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரச்சாரம் அமெரிக்காவில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்படுத்தல் மற்றும் கருப்பின மக்கள் போராட்டத்தை அதிபர் ட்ரம்ப் கையாண்ட விதங்களில் மக்களுக்கு அதிருப்தி உள்ளதால் ஜோ பிடன் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

மேலும் கருப்பின மக்களுக்கு எதிரான அமெரிக்காவின் அடக்குமுறை உள்ள நிலையில் ஜமைக்கா – இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளாராக களமிறங்கியுள்ளது ஜனநாயக கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தேர்சல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய ட்ரம்ப் “ஜோ பிடன் ஆட்சிக்கு வந்தால் நிலைமையை மோசமாக்கி விடுவார். மேலும் ஒவ்வொரு காவல் துறையையும் நீக்க கூட அவர் முடிவெடுப்பார். கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியாக இருக்கலாம். ஆனால் அவர் மிகவும் மோசமானவர். அவரை விட எனக்குதான் இந்தியர்கள் ஆதரவு அதிகம்” என பேசியுள்ளார்.