1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. today petrol and diesel rate

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

petrol
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியாவின் அண்டை மாநிலங்களான இலங்கை பாகிஸ்தான் வங்கதேசம் ஆகிய நாடுகளில் மிகப்பெரிய அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் உயரவில்லை என்பது சாதனையாக கருதப்படுகிறது
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னை உள்பட இந்தியா முழுவதும் வரும் டிசம்பர் வரை பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
இன்று 15 மாவட்டங்களில் செம மழை! – வானிலை ஆய்வு மையம்!