தௌசன்ட் ஓக்ஸ்: கலிஃபோர்னியா பாரில் சரமாரி துப்பாக்கிச் சூடு - குறைந்தது 12 பேர் பலி
அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள தௌசண்ட் ஓக்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாரில் ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் தாக்குதலில் ஈடுபட்டவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இது தவிர குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.தாக்குதல் நடந்தபோது பாரில் கல்லூரி இசை விழா ஒன்று நடைபெற்றுவந்தது. அப்போது 200 பேர் பாரில் இருந்ததாகத் தெரிகிறது. இதில் அதிகாரி ஒருவர் உட்பட மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 23.20 மணிக்கு இந்த தாக்குதல் நடந்தது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஆட்கள் அங்கிருந்து கொண்டு செல்லப்படுவதைக் காட்டு காணொளி ஒன்று ஒளிபரப்பாகியுள்ளது. அதிகாரிகள் வந்தபோது துப்பாக்கிச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததாகவும், இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகவும் வென்ட்சுரா கவுண்டி ஷெரீஃபின் செய்தித் தொடர்பாளர் எரிக் பஸ்சௌவ் தெரிவித்தார்.
வியாழன் காலையில் பயங்கரமான இந்த துப்பாக்கிச்சூடு பற்றி அறிய வந்ததை குறிப்பிட்டும், இதில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளை புகழ்ந்தும் அதிபர் டிரம்ப் டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.
கலிபோர்னிய நெடுஞ்சாலை காவல்துறையினர் 3 நிமிடங்களில் சம்பவ இடத்தை சென்றடைந்துள்ளனர். முதலில் நுழைந்துள்ள அலுவலர் மீது பலமுறை சுடப்பட்டுள்ளது. ஷெரீஃபின் செர்ஜன்ட் மருத்துவமனையில் வைத்து இறந்துள்ளார் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி வன்முறை ஆவணக்காப்பக இணையதளத்தின்படி இந்த ஆண்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி 1200 பேருக்கு மேலானோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கொல்லப்பட்டோரில் 3000 பேர் 18 வயதுக்குட்பட்டவர்.
வியாழன் காலையில் பயங்கரமான இந்த துப்பாக்கிச்சூடு பற்றி அறிய வந்ததை குறிப்பிட்டும், இதில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளை புகழ்ந்தும் அதிபர் டிரம்ப் டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.