வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 12 செப்டம்பர் 2015 (16:56 IST)

”புலிகளுடன் ராஜபக்சேவிற்கு தொடர்பு இருந்ததற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன” - ரணில் விக்ரமசிங்கே

விடுதலைப் புலிகளுடன் மகிந்த ராஜபக்சேவிற்கு தொடர்பு இருந்ததற்கான நிறைய ஆதாரங்கள் உள்ளன என்று இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கரசிங்கே கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் கூறுகையில், “ராஜபக்சேவும் அவருடைய சகாக்களும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததற்கு எத்தனையோ ஆதாரங்கள் உள்ளன. பிரபாகரனுடன் தேர்தல் உடன்பாட்டுக்கு வருவதை விட பதவி ஏதும் இல்லாமல் அரசியல் வனாந்தரத்தில் காலம் கழிக்க நான் தயார் என்று அறிவித்தேன்.
 
அதன்படியே பத்தாண்டுகள் பதவிக்கே வர முடியாமல் விலகியிருந்தேன். போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கூட நான் பிரபாகரனுடன் செய்து கொள்ளவில்லை, நார்வே அரசுடன்தான் செய்துகொண்டேன்” என்றார்.
 
மேலும், 2005 அதிபர் தேர்தலில் உங்களுடைய தோல்விக்கு அதுதான் காரணமா? அப்படியயன்றால் (ரகசிய) பேரம் ஏதாவது இருந்ததா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரணில், “பேரம் நடந்தது; அதை அவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். இலங்கை ரூபாயில் 200 கோடிக்கும் மேல் கைமாறியது.
 
சுனாமியால் பாதிக்கப்பட்ட வீடுகளைக் கட்டித்தரப் பணம் தரப்பட்டது. எந்த வீடும் புதுப்பிக் கப்படவில்லை. 2006 இறுதி வரை, 2007 தொடக்கம் வரையில்கூட பணம் தரப்பட்டு வந்தது” என்றார்.