வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 1 நவம்பர் 2019 (16:31 IST)

ஜஸ்ட் மிஸ் ’செல்போனில் ’பேசியபடி தண்டவாளத்தில் விழுந்த பெண் ! பதறவைக்கும் வீடியோ

யூரோப்பிய நாடான ஸ்பெயினில் ஒரு பெண் பிசியாக செல்போனில் பேசிக்கொண்டே தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் ( புட்பால் விளையாட்டுக்கு பெயர் பெற்ற ஊர் இது )எனும் நகரில் உள்ளது எஸ்டெரக்கோ ஸ்டேசன். இங்கு ஒரு பெண் ரெயிலுக்காக நின்றிருந்தவாறு, நீண்ட நேரமாக செல்போனில் மிகவும்  பிசியாகப் பேசிக்கொண்டிருந்தார்.
 
அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக அப்பெண் தண்டவாளத்தில் விழுந்தார். அந்த நேரம் பார்த்து எதிரில் ரயில் வந்துகொண்டிருந்தது. நல்லவேளையாக அருகில் இருந்த பயணிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். 
 
இந்த சம்பவம் அங்குபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.