வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (20:32 IST)

ஆணாக மாறும் சிறுமிகள் : ஆப்பிரிக்காவில் அதிசயம்

ஆப்பிரிக்க நாட்டில், ஒரு கிராமத்தில் பனிரெண்டு வயதில் பெண் குழந்தைகளில் சிலர் ஆண்களாக மாறும் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது.


 
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் மிகவும் பின் தங்கிய ஒரு கிராமத்தில் இந்த அதிசய நிகழ்வு நடக்கிறது. அங்கு பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒரு சிறுமி பனிரெண்டு வயதில் ஆணாக மாறுகிறாள். அதாவது பனிரெண்டு வயது தொடங்கும் போது சிறுமியாக இருக்கும் பெண் சிறுவனாகிறான். இது குறித்து உயிரியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
சிறுமி சிறுவனாக மாறும்போது, ஆணுக்குரிய உறுப்புகள் அதுவாகவே உருவாகிறது. அதாவது, பெண்ணுறுப்பு மறைந்து ஆணுறுப்பு தோன்றுகிறது.
 
இவ்வாறு ஆணாக மாறுபவர்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்களம்.  இது பற்றி  'டாகுமெண் டரி' படத்தை சமீபத்தில் 'பி.பி.சி.' டெலிவிஷன் ஒளிபரப்பியது. அதற்கு 'சவுன்ட் டவுன் லைப்' என பெயரிட்டிருக்கிறது.