ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 12 டிசம்பர் 2016 (11:36 IST)

சூரியன் தற்போது இருப்பதை விட 100 மடங்கு பெரிதாகும்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!!

சூரியன் இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் தற்போது உள்ளதை விட 100 மடங்குகள் பெரிதாகும் என்று விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


 
 
விண்வெளியில் பல நட்சத்திரங்கள், நட்சத்திரக்குடும்பங்கள் உள்ளனர். பால் வழி அண்டத்திலுள்ள சூர்ய குடும்பத்தில் தான் நமது கோளானது பூமி உள்ளது. பூமி தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை சுற்றி வருவதால் தான் கால மாறுபாடுகள் நிகழ்கின்றனர்.
 
இதனால் பல்வேறு இயற்கை மாறுபாடுகள் நிகழ காரணமா உள்ள சூரியனானது, மஞ்சள் குள்ளான் என்ற நிலையில் இருந்து சிவப்பு ராட்சன் என்ற 100 மடங்கு பெரிதான நிலைக்கு மாறும் என்றும், அதனால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், இதன் காரணமாக பூமியில் உயிர் வாழ முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும் ஆய்வின் முடிவு கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.