1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2019 (21:04 IST)

பறந்துசென்ற விமானத்தில் மயங்கிய விமானி ... என்ன நடந்தது திடுக் சம்பவம்

இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரித்தானியாவின் மன்செஸ்டரிலிருந்து மடைரா என்னும் தீவை நோக்கி விமானத்தை இயக்கிச் சென்ற விமானி திடீரென மயங்கிவிழுந்தார். அப்போது பயணித்தவர்களில் ஒரு விமானி இருந்ததால் அவர் விமானத்தை பத்திரமாகத் தரையிறக்கினார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மான்செஸ்டரிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று வானில் பறந்த சிறிது நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக பறப்பதாக உணர்ந்து விமான பயணிகளும், விமான ஊழியர்களும் திடீரென பதற்றம் அடைந்தனர். விமானத்திற்குத்தான் எதோ பிரச்சனை என எல்லோரும் பரபரப்பாக இருக்கும் நேரத்தில் விமானத்தில் இருந்த பயணி விமானி ஒருவரிடம் , ஊழியர் ஒருவர் சென்று உதவி கோரவே,அவர் எழுந்து விமானி அறைக்குள் சென்றுள்ளார். அப்போது விமானி மயங்கி இருந்துள்ளதைப் பார்த்து தானே விமானத்தை பாதுகாப்பாக இயக்கியுள்ளார். 
 
அதன் பின்னர் சிறிது நேரத்தில் ஒரு மருத்துவ அவசர நிலை காரணமாக, விமானம் அருகிலுள்ள போர்ட்டோ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட இருப்பதாக விமான ஊழியர்கள் பயணிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 
 
பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கப்பட்டதுடன், சக்கர நாற்காலி கொண்டு வரப்பட்டு அதில் விமானி அமர்த்தப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
 
அதேவிமான நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு விமானி, விடுப்பு எடுத்து விமானத்தில் பயணம் சென்றதால் நல்லவேளையாக விமான ஊழியர்கள் அவரிடம் உதவி கேட்க அவரும் விமானத்தை இயக்கி தரையிறக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.