செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 6 அக்டோபர் 2022 (15:11 IST)

இன்னும் டாஸ் கூட போடவில்லை: இந்தியா-தெ.ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி நடக்குமா?

cricket rain
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே லக்னோவில் இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற இருந்தது. 
 
மதியம் ஒரு மணிக்கு தொடங்க வேண்டிய இந்த போட்டி மழை காரணமாக இரண்டு மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது மூன்று மணி தாண்டிய நிலையில் இன்னும் டாஸ் கூட போடவில்லை என்பதால் இன்றைய போட்டி நடைபெறுமா? என்பது சந்தேகத்திற்குரிய வகையில் உள்ளது 
 
லக்னோவில் இன்னும் மழை பெய்து வருவதால் இன்றைய போட்டி நடப்பது சந்தேகம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் 20 ஓவர் போட்டி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 

Edited by Siva