செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (18:18 IST)

உக்ரைனில் பொதுமக்களின் பலி எண்ணிக்கை ? ஐ நா முக்கிய தகவல்

ukraine theater
உலகில் மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா, சிறிய நாடான உக்ரைன் மீது போர்தொடுத்து உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.  இதற்குப் பதிலடியாக உக்ரைன் ராணுவ வீரர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

இரு நாடுகளுக்கு இடையேயான போர் 150 நாளை நெருங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதித்தும் ரஷியா உக்ரைன் மீதான படையெடுப்பில் இருந்து பின்வாங்கவில்லை.

இந்த நிலையில், போர் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை உக்ரைனில் பொதுமக்கள்  5,110  உயிரிழந்துள்ளதாகவும், 6,752 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், ரஷியா பீரங்கி தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஐ .நா மனித உரிமைகள் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இது உலக  நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.