1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 நவம்பர் 2018 (15:09 IST)

மர்மம் நிறைந்த அந்தமான்தீவு ஒரு பார்வை…

அந்தமானில் சென்டினல் பழங்குடியின மக்கள் சில நாட்களுக்கு முன் அமெரிக்க கிருஸ்தவ  மத போதகரான ஜானைக் கொன்றதாக சர்ச்சை எழுந்தது.  அத்தீவிலிருந்து அவரது உடலை மீட்டு அனுப்பும் படி அமெரிக்காவும் இந்தியாவை நிர்பந்தித்து வருகிறது.

இந்நிலையில்  ஜாவா மற்றும் செண்டினல் பழங்குடிகள் பற்றி பல அதிர்ச்சியூட்டும் செய்திகள் பரவலாகி வருகின்றன.  இங்கு சுற்றுலா செல்லும் பல மக்கள் பலர் இத்தீவின் அழகை வீடியோ எடுத்து வருகின்றனர்.

ஆனால் இவர்கள் வசிக்கும் பகுதிக்குள் யாரும் செல்லவில்லை. அங்கு சென்றவர்களுக்கு உயிருக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாத நிலையே இருந்தது.இருக்கிறது. சராசரி உலகத்தின் வாசத்திலிருந்து விலகி இருக்கிறார்கள்.

ஆனாலும் அந்தமானில் வசிக்கும் ஆதிவாசிகளுக்கு எந்தவித தொந்தரவுகளும் கொடுக்கக்கூடாது என்றும். உலகின் பூர்விக குடிகள் இந்த அந்தமானிலுள்ள சென்டினல் தீவில் வசிக்கும் மக்கள் என்றும் இவர்களுக்கு புராதன முக்கியத்துவம் அடையாளம் என்பது இந்த தீவுதான்  என்பது இந்திய அரசாங்கத்தின் எண்ணம்.

அதனால் அந்திய மனிதர்கள் வந்தால் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் இருப்பதுதான் இவர்களின் தனித்துவம்.

தற்போது உலக அளவில் உச்சரிக்கப்படும் ஒரு பெயர் ஜான். தான் வணங்கும் கிருஸ்தவ மதத்தை உலகளாவிய அளவில் பரப்புவதை இவர் பெரிதும் விரும்பினார்.

அதிலும் முக்கியமாக பூர்வ குடிகள் ஆதிவாசிகளாக வசிக்கும் இந்த சென்டினல் தீவில் இருக்கும் மக்களூக்கு தன்னால் முடிந்த அளவு இயேசுவை பற்றி கூற வேண்டும் என்பதை தன் லட்சியமாக கொண்டிருந்தார் ஜான். ஆனால் விதி சென்டினல் ஆதிவாசிகளின் வடிவில் அவரது உயிரை அம்புக்கு இரையாக்கிவிட்டது.

ஆனால் தான் இறக்கப் போவதை முன் கூட்டியே அறிந்து கொண்டவர் சில நாட்களுக்கு முன் தம் கைப்பட எழுதியுள்ள டைரியில் ‘நான் இங்கு வந்தது பைத்தியகாரத்தனமாக தெரியலாம். ஆனால் அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்பட போவதில்லை.இந்த மக்களுக்கு இயேசுவின் போதனைகளை தெரிவிப்பேன். இதனால் என் உயிருக்கு ஆபத்து நேர்ந்தாலும் பரவாயில்லை’ என்று அவர் கூறியுள்ளார்.

இந்த டைரி அந்தமானில் உள்ள மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டு அது அமெரிக்காவில் உள்ள அவரது இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்க நாட்டாமை அண்ணன் சென்டினல் தீவு வாசிகளால் கொல்லப்பட்ட ஜானின் உடலை மீட்டுத்தருமாறு இந்தியாவிடம் கேட்டுகொண்டுள்ளது.

நேற்றுக்கு முன்தினம் அந்தமான் சென்டினல் தீவுக்கடற்கரைக்குச் சென்ற இந்திய கடற்படை வில்லம்பு கொண்டு வேட்டையாடிக்கொண்டிருந்த ஆதிவாசி மக்களை நெருங்காமல், அவர்களை எந்த சட்டையும் செய்யாமல் திரும்பி வந்து விட்டதாக செய்திகள் உலவுகிறது.

ஜானில் உடல் கிடைக்குமா இந்தியாவின் முயற்சி பலிக்குமா.. ?இல்லையா என்பதும், அடுத்து அமெரிக்க தேசத்தைச் சேர்ந்த ஜானின் உயிரைப்பறித்த சென்டினல் ஆதிவாசிகளின் நிலைமை என்னவாகும்..?

அந்தமானில் அவர்களின் தலைமுறைகள் இப்படியே பூமிக்கு ஒதுக்குப்புறமாக வாழ்ந்து வருவது எப்போது வெளியே வெளிச்சத்துக்கு வரும் என்பதும் கேள்விக்குறிதான்.

ஆனால் இந்த தீவில் ஆராய்ச்சிக்கு விதிவிலக்காக இவ்வினத்தவரின் மனம் எப்போது ஆதரவளிக்கும் என்பதும் உலக மக்களிடையே பெரும் ஆர்வத்தை ஜானின் மறைவின் மூலம் ஏற்படுத்தியுள்ளது.