1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2024 (10:07 IST)

மாயமான சிரியா அதிபரின் விமானம்? ரஷ்யாவில் ரகசியமாக புகுந்தாரா? - அடுத்தடுத்து பரபரப்பு!

Syria President

சிரியாவின் தலைநகர் டெமாஸ்கஸை கிளர்ச்சியாளர் கும்பல் கைப்பற்றிய நிலையில் சிரிய அதிபர் தப்பி சென்ற விமானம் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சிரியாவை அதிபர் பஷர் அல் அசாத் ஆட்சி செய்து வந்த நிலையில் அவருக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டில் சிரியாவில் கிளர்ச்சி குழு உருவானது. இந்த கிளர்ச்சி குழுவை ஒழிக்க அதிபர் அசாத் ராணுவத்தை ஏவிய நிலையில், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். இதனால் சிரியாவிலிருந்து உலக நாடுகள் பலவற்றிற்கும் மக்கள் அகதிகளாக செல்லத் தொடங்கினர்.

 

கடந்த பல ஆண்டுகளாக சிரிய ராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் கிளர்ச்சியாளர்கள் குழு, சிரியாவின் தலைநகர் டெமாஸ்கஸை கைப்பற்றியது. மேலும் உலகம் முழுவதும் உள்ள சிரிய மக்கள் மீண்டும் நாடு திரும்பலாம் என்றும், சிரியா விடுதலையடைந்துவிட்டதாகவும் அறிவித்துள்ளது.
 

 

கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றியபோது அதிபர் பஷர் அல் அசாத் தனது குடும்பத்தினருடன் விமானத்தில் தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியான நிலையில், அந்த விமானம் ராடாரிலிருந்து மாயமானது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற கருத்து இருந்து வந்த நிலையில், தற்போது அந்த விமானம் ரகசியமாக ரஷ்யாவிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

 

அதிபர் ஆசாத்திற்கு ஆரம்பம் முதலே ரஷ்யாவுடன் இருந்த நட்பின் காரணமாக அவர் அங்கு தப்பி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K