1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 நவம்பர் 2024 (09:26 IST)

வெள்ள பாதிப்பை பார்க்க வந்த ஸ்பெயின் மன்னர்! சேற்றை வாரி அடித்த மக்கள்! - வைரலாகும் வீடியோ!

King of Spain

ஸ்பெயினில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகளை காண வந்த மன்னர் மீது மக்கள் சேற்றை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடந்த சில வாரங்களில் பெரும் கனமழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டது. இந்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் மாயமாகியுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணி மந்தமாக நடைபெறுவதாக மக்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

இந்நிலையில் வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்த பைபோர்ட்டோ நகரத்திற்கு ஸ்பெயின் மன்னர் ஃபிலிப் மற்றும் அவரது மனைவி ராணியார் லெட்டிஸியா ஆகியோர் பாதிப்புகளை பார்வையிட சென்றனர்.
 

 

அப்போது மன்னருக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் சிலர் சேற்றை வாரி மன்னர் மீது வீசியதால் பெரும் பரபரப்பு எழுந்தது. ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் மன்னர் மீது சேறு படாமல் குறுக்கே நின்று தடுத்துக் கொண்டே சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K