புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 10 அக்டோபர் 2018 (15:12 IST)

மனித மிருகம் ,மனைவியுடன் கைது செய்யப்பட்டான்...

மெக்‌சிகோ நாட்டில் ஒரு காம கொடூரன் ஈவு இரக்கமில்லாமல் இருபது பெண்களை கற்பழித்து, அவர்களின் உடலை கண்டந்துண்டமாக வெட்டி தன் வீட்டில் நிலத்துக்கடியில் புதைத்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பல ஆயிரம் பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
 
இதனால் போலீஸாருக்கு கடும் தலைவலியாக இருந்து வந்த இந்த தொடர் கொலை சம்பவம் தொடர்பாக அவர்கள் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
 
இந்நிலையில் மெக்சிகோ மாநிலம் ஈக்காடிபெக் நகரில் குடியிருக்கிற ஜூயான் கார்லஸ் (34) அவனுடைய மனைவி பேட்ரிசியா (38) ஆகிய இருவரையும் போலீஸார் சந்தேகத்தில் பேரில் கைது செய்தனர்.
 
ஏற்கனவே அருகில் உள்ளவர்கள் இவர்களை பற்றி புகார் கூறியிருந்ததால் போலீஸார் இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
 
அப்போது அவன் கூறியதாவது: 
 
'ஜூயான் கார்லஸ் தான் ஆறு ஆண்டுகளாக இருபதுக்கும் மேற்பட்ட பெண்களை கடத்தி கற்பழித்து கொலை செய்து வந்ததை ஒப்புக்கொண்டான் . மேலும் சிறு வயதில் பெற்ற தாயின் செய்கையால் தனக்கு பெண்களின் மீது வெறுப்பு வந்ததாகவும், பிற ஆண்களுடன் அவள் உல்லாசமாக இருப்பதை வற்புறுத்தி பார்க்க வைத்ததாகவும் .பலவித சித்ரவதைகள் தான் அனுபவித்ததாகவும் அவன் தெரிவித்துள்ளான்.'
 
இந்தக் கொலைகளுக்கு அவனுடைய 'பொல்லாத மனைவியும்உடந்தையாக இருந்துள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இதனையடுத்து மனித உருவில் மிருகமாக நடமாடி பல பெண்களைகொன்ற ஜூயானை போலீஸார் சிறையில் அடைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.