திங்கள், 25 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2023 (18:39 IST)

மகளின் பெயரை அதிகமுறை பச்சை குத்தி சாதனை படைத்த தந்தை!

tattoo
இங்கிலாந்து நாட்டில், மகளின் பெயரை பச்சை முத்தி தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார் தந்தை ஒருவர்.

உலகில் பலரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி,பல உலகச் சாதனைகள் படைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தந்தை ஒருவர் தன் மகளின் பெயரை அதிகமுறை பச்சை குத்தி சாதனை படைத்துள்ளார்.

மார்க் ஒவன் எவன்ஸ் (49). இவர், தன் மீது அதிக பாசம் கொண்டிருப்பதால், லூசி என்ற மகளின் பெயரை கடந்த 2017 ஆம் ஆண்டு 267 முறை பச்சை குத்தி சாதனை படைத்திருந்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டீட்ரா விஜில் தன் உடலில் 300 முறை தன் பெயரை பச்சை குத்தி மார்க் ஓவனின் சாதனையை முறியடித்தார்.

இந்தச் சாதனையை முறியடிக்க திட்டமிட்ட   மார்க் ஓவன் 2 டாட்டூ கலைஞர்கள் மூலம் தன் உடலில் 667 முறை மகளின் பெயரை  பச்சை குத்தி சாதனை படைத்துள்ளார்.