திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 8 ஜூன் 2017 (12:53 IST)

கழுதையை உயிரோடு புலிகளுக்கு இரையாக்கிய அதிகாரிகள் - வீடியோ இணைப்பு

சீனாவில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில், அங்குள்ள புலிகளுக்கு அதிகாரிகள் கழுதையை உயிருடன் இரையாக்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
சீனாவின் ஜன்க்சோ விலங்குகள் சரணாலயத்தில் புலிகள் அதிகமாக உள்ளன. அங்கிருந்த அலுவலர்கள் ஒரு கழுதையை உயிருடன் பிடித்து வந்து அங்கிருந்த குட்டையில் விளையாடிக்கொண்டிருந்த புலிகளுக்கு நடுவே தூக்கி வீசினர்.
 
அதனைக்கண்ட புலி ஒன்று கழுதையை அடித்து தண்ணீருக்குள் அழுத்தியது. அதனை மீறி தப்பித்து செல்ல முயன்ற  கழுதையை புலிகள் தண்ணீருக்குள் அழுத்தி கொன்று கிழித்து தின்கின்றன. இதனை அங்கிருந்த பார்வையாளர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதிகாரிகளின் இந்த செயலுக்கு சமூக  வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.