வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 9 நவம்பர் 2024 (13:00 IST)

அமெரிக்கர்களை திருமணம் செய்தால் குடியுரிமை: ஜோ பைடனின் திட்டம் ரத்து..!

அமெரிக்கர்களை திருமணம் செய்து கொண்டால் குடியுரிமை என்ற அதிபர் ஜோ பைடனின் திட்டம் ரத்து செய்யப்படுவதாக டெக்சாஸ் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் அகதிகள் அமெரிக்கர் யாராவது ஒருவரை திருமணம் செய்தால் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் மசோதா அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் இயற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்திற்கு ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் தற்போது இந்த திட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜோ பைடனின் இந்த திட்டத்தின்படி கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதிக்கு முன்பு அமெரிக்க ஒருவரை மணந்து 10 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கியிருந்தால் யாருக்கு வேண்டுமானாலும் குடியுரிமை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

  ஏற்கனவே இந்த திட்டம் அமல்படுத்த போது ட்ரம்பு கடுமையாக எதிர்த்தார் என்பதும் தான் வெற்றி பெற்று அதிபர் ஆனால் இந்த திட்டம் வாபஸ் பெறப்படும் என்றும் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



Edited by Mahendran