வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2015 (16:33 IST)

மாலி நாட்டில் ஜிகாதிகள் திடீர் தாக்குதல் : 175 பேரை பிணைக்கைதியாக பிடித்தனர்

மாலி நாட்டின் தலைநகர் பமோகோவில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


 
 
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில், ஐ.ஏஸ்.ஐ.ஏஸ் தீவிரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளவில்லை. அதற்குள் இன்னொரு தாக்குதல் மாலி நாட்டில் நடந்துள்ளது.
 
மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் ஒரு நட்சத்திர ஹோட்டலில், பொதுமக்கள் உணவருந்திக் கொண்டிருந்த போது, ஜிகாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். மேலும் அங்கிருந்த 175 விருந்தினர்களை பிணைக் கைதிகாளக பிடித்து வைத்துள்ளதாகவும், அதில் மூன்று பேரை சுட்டுக்கொன்று விட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
 
பாதுகாப்பு படையினர் உடனே அங்கு விரைந்து, ஓட்டலை சுற்றி வளைத்து உள்ளனர். ஜிகாதிகள் தானியங்கி துப்பாக்கிகளை கொண்டு தாக்குதல்  நடத்தி வருகிறார்கள். பாதுகாப்பு படையினருக்கும், ஜிகாதிகளுக்கும் சண்டை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
 
அந்த ஓட்டலில் சில அமெரிக்கர்களும் தங்கியிருப்பதால், அவர்களை பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று அமெரிக்க தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. வடக்கு மாலியானது ஜிகாதிகள் பிடியில் உள்ளது. இந்த ஜிகாதி பிரிவுகள் அல்-கொய்தா தீவிரவாத இயத்துடன் தொடர்பு உடையவை. இங்கு பிரான்ஸ் தலைமையிலான ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.