1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2017 (16:38 IST)

3 பள்ளி மாணவர்களுடன் உடலுறவு: உல்லாசமாக இருந்த இளம் ஆசிரியருக்கு சிறை!

3 பள்ளி மாணவர்களுடன் உடலுறவு: உல்லாசமாக இருந்த இளம் ஆசிரியருக்கு சிறை!

அமெரிக்காவில் மூன்று பள்ளி மாணவர்களுடன் உல்லாசமாக உடலுறவு கொண்ட இளம் ஆசிரியர் ஒருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.


 
 
அமெரிக்காவின் கேஸ்வில்லே கவுண்டி பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் 37 வயதான ப்ரியன்னே அல்டிஸ். இவருக்கு அந்த பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்களுடன் நெருக்கம் ஏற்பட்டு அவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
 
பலமுறை அந்த மாணவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார் அந்த ஆசிரியர். இந்த விஷயம் எப்படியோ வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த ஆசிரியர் மீது சிறுவர்களை தவறான வழிக்கு அழைத்து செல்லுதல் போன்ற சட்டத்தின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
 
இதனை விசாரித்த நீதிமன்றம் ஆசிரியருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. தற்போது சிறையில் இருக்கும் அவர் நான் செய்த தவறுக்கு நானே முழு பொறுப்பையும் ஏற்கிறேன். யார் மீதும் பழிபோட விரும்பவில்லை. மேலும் தான் திருந்தி வாழ ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.