திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (18:54 IST)

ஆஃப்கானிஸ்தானில் தேர்தல் ஆணையம் கலைப்பு- தலிபான்கள் அறிவிப்பு

ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்துவரும்  நிலையில் தேர்தல் ஆணையம் கலைக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் சில மாதங்க்களுக்கு முன் ஆட்சியைக் கைப்பற்றினர்.

அப்போது முதல் அந்நாட்டில் புதிய அறிவிப்புகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றனர். இது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந் நிலையில் பெண்கள் ஆண்களின் துணையுடன் தான் வெளியில் செல்ல வேண்டும் என புதிய கடுப்பாடு விதித்துள்ளது பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆஃப்கானிஷ்தானில் தேர்தல் ஆணையத்தை தலிபான்கள் கலைத்துள்ளனர். குறிப்பாக தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட்டு வந்த தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் புகார் ஆணையம் ஆகிய இரு அமைப்புகளையும் தலிபான்கள் அரசு கலைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.