ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 13 ஜூலை 2017 (14:54 IST)

வாழ்நாளின் இறுதி கட்டத்திற்குள் நுழைந்த சூரியன்; நாசா தகவல்

சூரியன் தனது வாழ்நாளிம் இறுதி கட்டத்திற்குள் நுழைந்து உள்ளதாக நாசா விஞ்ஞானிகளின் ஆய்வில் கூறப்படுகிறது.


 

 
நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் சூரியனில் 74,560 மைல் அகலம் கொண்ட சூரிய கோட்டையை கண்டறிந்துள்ளது. இது பூமியை விட 19 மடங்கு பெரிது. இந்த பகுதி சூரியனின் மற்ற பகுதிகளை விட குளிர்ச்சியானதாகவும், சூரிய கதிர்களை உற்பத்தி செய்யும் பகுதி என்றும் தெரிவித்துள்ளனர். 
 
இந்த பகுதி சுழன்று வருவதுடன் வேகமாக வளர்ந்து வருகிறது. சூரியன் வெளியிடும் அதிக ஆற்றலில் புதிய தீவிர ஊதா கதிர்கள் வெளியிடுவது தெரியவந்துள்ளது. இந்த சூப்பர் ரேஸ் கதிர்கள் பூமியில் உள்ள உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் சூரியன் தனது வாழ்நாளில் இறுதி கட்டத்திற்கு நுழைந்து விட்டதாக கூறப்படுகிறது.