1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 மார்ச் 2017 (13:32 IST)

தற்கொலை விழிப்புணர்வை தற்கொலை மூலம் உலகிற்கு சொன்னவரின் நிலை?

அயர்லாந்து நாட்டில் வசித்து வருபவர் ஜான் எட்வரடு. இவர் தனது மனைவி திரிஷுடன் வசித்து வருகிறார். உலகுக்கு ஆலோசனை கூற ஒரு வித்தியாச முயற்சி மேற்கொண்டுள்ளார்.


 
 
மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களுடன் இருப்பவர்கள் அதை கைவிட வேண்டும் என கூறி உயிருடன் தன்னை தானே சவப்பெட்டியில் வைத்து பூமிக்கடியில் 3 நாட்களுக்கு புதைக்க வைத்தார்.
 
புதைக்குழி உள்ளே அவருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு கொடுத்தன. அதுமட்டுமில்லாமல் இண்டர்நெட் வசதியும்  செய்யப்பட்டது. இதன் மூலம் ஜான் பேஸ்புக் நேரலையில், தற்கொலை செய்யும் எண்ணம் கொண்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாய் பேசியுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், நானும் 25 ஆண்டுகளுக்கு முன்னர் மன அழுத்தம் அடைந்து தற்கொலை எண்ணம் கொண்டேன். பின்னர் அதிலிருந்து மீண்டேன். எனவே, இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த காரியத்தில் ஈடுப்பட்டேன் என கூறியுள்ளார்.