துபாயில் சுலாஃபா 75 மாடி கட்டடத்தில் தீ விபத்து...
துபாயில் சுலாஃபா 75 மாடி கட்டடத்தில் தீ விபத்து...
துபாயில் மெரீனா என்ற பகுதியில் உள்ள சுலாஃபா என்ற அடுக்குமாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
துபாயில் மெரீனா என்ற பகுதியில் சுலாஃபா என்ற அடுக்குமாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 75 மாடிகளை கொண்ட இந்த கட்டடத்தில் குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த கட்டடத்தின் 35-வது மாடியில் இருந்து ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. மூன்று மணி நேரமாக தீ பற்றி எரிவதாக கூறப்படுகிறது. உடனடியாக கட்டடத்தில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்