1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (11:17 IST)

விண்வெளியை குப்பையாக்கும் எலான் மஸ்க்? – மேலும் 53 Starlink Satellites launch!

Starlink
செயற்கைக்கோள் வழி இணைய திட்டத்திற்காக ஸ்பேஸ் எக்ஸ் மேலும் 53 செயற்கை கோள்களை விண்ணில் ஏவியுள்ளது.

செயற்கைக்கோள் வழி நேரடி இணைய சேவை திட்டத்திற்காக வானில் சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை அனுப்பும் நடவடிக்கையில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் முதன்முதலாக ஒரே நேரத்தில் 60 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் விண்ணுக்கு அனுப்பியது. அதுமுதலாக தொடர்ந்து செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்போது மேலும் 53 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது.
spacex

ஃப்ளோரிடாவின் கேப் கேனவெரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன்9 ராக்கெட் மூலமாக இந்த செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. இதுவரை சுமார் 1,915 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

அதில் சில சேட்டிலைட்டுகள் ஏற்கனவே பழுதாகி விட்டதாக கூறப்படுகிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவும் இந்த சிறு ரக செயற்கைக்கோள்களால் விண்வெளி மேலும் மாசு அடையும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.