ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (14:36 IST)

கொரிய அதிபருக்கு 24 ஆண்டுகள் சிறை: கோடிக்கணக்கில் அபராதம்...

தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் சுங் ஹீயின் மகள் பார்க் கியூன் ஹே அதிபராகி ஊழலில் ஈடுப்பட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார். இவரது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
தென்கொரிய நாட்டின் முன்னாள் அதிபர் பார்க் சுங் ஹீ கடந்த 1963 முதல் 1979 வரை ஆட்சி செலுத்தினார். கடந்த 1978 ஆம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார்.
 
அதன் பிறகு இவரது மகள் பார்க் கியூன் ஹே கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தென்கொரியாவின் அதிபராக பதவி ஏற்றார். ஆட்சியை கைப்பற்றிய குறுகிய காலத்தில் பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கினார்.
 
இதையடுத்து, பாராளுமன்றத்தில் பார்க் கியூன் ஹே-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். சுமார் 2 கோடியே 30 லட்சம் வோன் (அமெரிக்க டாலர்களில் சுமார் 2 கோடியே பத்து லட்சம்) வரை ஊழல் செய்துள்ளார். 
 
இந்நிலையில், இவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு கோடியே 80 லட்சம் வோன் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டது. இது தென் கொரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.