திங்கள், 26 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (13:52 IST)

டிக்கெட் எடுக்காமல் விமானத்தில் சென்ற பாம்பு! பீதியடைந்த பயணிகள்!

Flight
அமெரிக்காவில் நியூஜெர்சி சென்ற விமானத்தில் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பா நகரில் இருந்து ’யுனைடெட் ப்ளைட் 2038’ என்ற விமானம் பயணிகளுடன் நியூ ஜெர்சிக்கு சென்றுள்ளது. இந்த உள்நாட்டு பயணிகள் விமானம் ப்ளோரிடாவில் கிளம்பியபோதே பாம்பு ஒன்று புகுந்ததாக தெரிகிறது.


இந்நிலையில் விமானம் நியூ ஜெர்சியை சென்றடைந்ததும் பயணிகள் இறங்க இருந்த நிலையில் எக்கனாமிக் வகுப்பில் இருந்த பாம்பை பயணிகள் கண்டுள்ளனர். இதனால் அவர்கள் பீதியடைந்து அலறினர். இதுகுறித்து உடனடியாக வனவிலங்கு பாதுகாப்பு ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் விரைந்து வந்து பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். மேலும் விமானத்தில் வேறு எங்காவது பாம்புகள் இருக்கின்றனவா என்றும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By: Prasanth.K