1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Updated : செவ்வாய், 14 ஜூன் 2016 (16:52 IST)

பாவடையில் பசங்க, ட்ரவுசரில் பொண்ணுங்க: இங்கிலாந்தில் புரட்சி பள்ளிகள்

இங்கிலாந்தில் 80-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சீருடையில் ‘பாலினம் நடுநிலை’யை வலியுறுத்தி பசங்க பாவடை அணிவதற்கும், பொண்ணுங்க ட்ரவுசர் அணிவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 
 
தாங்கள் பாலின வேறுபாடு உடைய குழந்தை என்பதை உணர்ந்தால் அவர்களுக்கு இந்த அனுமதி உள்ளது என அரசங்கம் நிதியளிக்கும் பள்ளிகள் தெரிவித்துள்ளன.
 
இதன் மூலம் பள்ளிகள் தங்கள் ஆடைக்கட்டுப்பாடு கொள்கைகளை தளர்த்தியுள்ளன. மாணவர்கள் தாங்கள் பாதுகாப்பாக உணரும் ஆடையை அணியலாம். மாணவர்களின் பாலினம் குறித்தான விஷயத்தில் இந்த பள்ளிகள் மென்மையான அணுகுமுறையை கையாளுகின்றன. மாநில அரசுகளால் நடத்தப்படும் 80 பள்ளிகள் இந்த புதிய பாலின நடுநிலை சீருடை கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
பள்ளிகளில் லெஸ்பியன், கேய், இருபாலர் உறவு மற்றும் திருநங்கை மாணவர்கள் மீது பாகுபாடு காட்டினால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
தன்னாட்சி பள்ளிகளும், முன்னணி கல்லூரிகளும் இந்த பாலின நடுநிலை சீருடை முறையை இந்த ஆண்டில் விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக கூறியுள்ளன. இந்த புதிய சீருடை முறைக்கு ஒரு சில கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களும் அங்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.