1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 ஏப்ரல் 2021 (11:32 IST)

இந்தியாவிற்கு ஆக்ஸிஜனை அனுப்பிய சிங்கப்பூர்! – விமானத்தில் வந்தடைந்தது!

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சிங்கப்பூர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அனுப்பியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதனால் இந்திய அரசு பல நாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி எந்திரங்களை வாங்க திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு உதவ பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க சிங்கப்பூர் அரசு 256 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அனுப்பியுள்ளது. சிங்கப்பூர் அமைச்சர் மாலிகி ஓஸ்மான் அந்நாட்டு விமானப்படையின் சி-130 ரக விமானங்களில் ஆக்ஸிஜனை அனுப்பி வைத்தார்.