திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (12:13 IST)

உலகின் முன்னணி நிறுவனத்திற்கு சி.இ.ஓவான இந்திய பெண்!

உலகின் முன்னணி நிறுவனத்திற்கு சி.இ.ஓவான இந்திய பெண்!
கூகுள், மைக்ரோசாப்ட், டிவிட்டர் உள்பட உலகின் முன்னணி நிறுவனங்களின் சிஇஓவாக இந்தியர்கள் இருந்து வரும் நிலையில் உலக அளவில் பிரபலமான மற்றொரு நிறுவனத்திற்கு இந்திய பெண் ஒருவர் சிஇஓவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
உலகப் புகழ்பெற்ற ஷனேல் என்ற நிறுவனத்தின் சிஇஓவாக இந்தியாவின் லீனா நாயர் என்பவர் சி.இ.ஓஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பிரான்ஸ் நாட்டின் ஷனேல் நிறுவனம் ஆடை மற்றும் ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 75 ஆயிரம் கோடி என்பது என்பது குறிப்பிடத்தக்கது
 
யூனிலீவர் என்ற நிறுவனத்தின் ஹெச்.ஆர் ஆக பணிபுரிந்து கொண்டிருந்த லீனா நாயர் தற்போது ஷனேல் நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பை ஏற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.