பாகிஸ்தானுக்கு தலைகுனிவு!
பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிக்கக்கோரி அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் இரு உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதற்கு ஆதரவாக பெயர் தெரிவிக்காத ஒருவர் கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி அமெரிக்காவில் கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கினார். கடந்தவாரம் வரை இதற்கு சுமார் 6 லட்சத்து 13 ஆயிரம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், அண்மையில் காஷ்மீர் உரியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல், அதையடுத்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையை, என கடந்த ஒரு வாரத்தில் இந்த கையெழுத்து இயக்கத்தில் கூடுதலாக சுமார் 50 ஆயிரம் பேர் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர்.
இதனால் பாகிஸ்தானுக்கு தலைகுனிவு நிலை ஏற்பட்டுள்ளது.