ப்ளே பாய் மாடலுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும்: வெளியான டிரம்ப் ஆடியோ!

trumph
Last Modified சனி, 21 ஜூலை 2018 (21:15 IST)
அமெரிக்கவின் அதிபர் தேர்தல் நடைபெற்ற போது குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய டிரம்ப் மீது பல்வேறு பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். ஆனால், பாலியல் புகார் குற்றச்சாட்டுகளுக்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார். 
 
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பும், முன்னாள் ப்ளே பாய் மாடல் ஒருவரும் பேசிக் கொள்வதை, டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கெல் கொஹென் ரகசியமாக பதிவு செய்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூயார்க்கில் உள்ள கொஹென் வீட்டில் நடத்தப்பட்ட எஃப்பிஐ சோதனைக்கு பிறகு, இந்த ஆடியோ பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
அதிபர் டிரம்புடன் உறவு வைத்து கொண்டதாக கூறும் கரென் மெக் டொகலுக்கு பணம் அளிப்பது தொடர்பாக, டிரம்ப் மற்றும் கொஹென் பேசிக் கொள்ளும் ஆடியோ அதில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :