1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (08:40 IST)

’மகிழ்ச்சி’- ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

’மகிழ்ச்சி’- ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு காலிறுதி மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சாக்‌ஷி மாலிக், கிர்கிஸ்தானின் டைனிபெகோவாவை 8-5 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.


 


ஆட்டத்தின் முதலில் 0-5 என்ற கணக்கில் சாக்‌ஷி பின் தங்கியிருந்த நிலையில், தன் கடுமையான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி 8-5 என்ற கணக்கில் டைனிபெகோவாவை வீழ்த்தி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

ஆரம்ப சுற்றுகளில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி, காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளி அல்லது தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இருந்தாலும், வெண்கலத்துக்கான சுற்றுகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஹரியாணா மாநிலம் ரோட்டக்கை சேர்ந்த சாக்‌ஷி மாலிக், ரியோ ஒலிம்பிக் 2016-ல் பதக்கம் வென்ற முதல் இந்திய ஒலிம்பியன் என்ற பெருமையும், ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற நான்காவது பெண்மணி என்ற பெருமையும், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.