பெண்களை அனுமதிக்க சபரிமலை என்ன செக்ஸ் டூரீஸ்ட் இடமா? தேவசம்போர்டு தலைவர்
சபரிமலையில் 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க கோரிய வழக்கை சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் 5 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த சபரிமலை தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: சபரிமலைக் கோவிலை நாங்கள் தாய்லாந்தில் உள்ள செக்ஸ் டூரிசம் கோவில்கள் போல மாற்ற விரும்பவில்லை. அதிகளவு நெரிசல் உள்ள சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது கடினம். நீதிமன்றமே அனுமதித்தாலும் சுயமரியாதை உடைய பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் தைரியமாக செல்ல விரும்புவார்கள் என்று நான் கருதவில்லை' என்று கூறியுள்ளார். இவர் ஏற்கனவே சபரிமலை கோவிலுக்கு செல்லும் பெண்கள் தீட்டுபடாமல் இருக்கிறார்களா என்பதை கருவி வைத்தா பரிசோதிக்க முடியும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி கடும் கண்டனத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செக்ஸ் டூரிசம் கோவில்களுடன் சபரிமலையை ஒப்பிட்டு பேசுவது முட்டாள்தனமான கருத்து என்று கூறிய கேரள அறநிலையத்துறை அமைச்சர் சுரேந்திரன், தேவசம்போர்டு தலைவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.