புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (11:27 IST)

ரஷ்யா எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கலந்த தேநீர்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

ரஷ்யாவின் முக்கியமான எதிர்க்கட்சி தலைவர்களுள் ஒருவரான அலெக்சி நவல்னி 44க்கு விஷம் கலந்த தேநீர் கொடுக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ரஷ்யாவில் அதிபர் புடின் தான் வாழ்நாள் முழுவதும் அதிபராக இருக்க எல்லாவகையான வேலைகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் அவரைக் கடுமையாக எதிர்த்து பேசி வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி 44. இவர் அங்கு நடக்கும் ஊழல்களை வெளிக்கொண்டு வந்துகொண்டிருந்ததால் அரசுக்கு பெரிய அளவில் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில் அவர் விமானத்தில் பயணம் செய்த போது தேநீர் அருந்தியதும் மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் உணவில் விஷம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சையில் உள்ளார் நவல்னி.