திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 15 டிசம்பர் 2020 (10:24 IST)

இதை 5 வருஷமா காதலிக்கிறேன்! பெட்டியை திருமணம் செய்த பெண்! – ரஷ்யாவில் விநோதம்!

உலகில் நடக்கும் விநோதமான பல திருமண சம்பவங்களை மிஞ்சி ரஷ்ய பெண் ஒருவர் பெட்டி ஒன்றை திருமணம் செய்துள்ளது வைரலாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல்வேறு நூதன திருமணங்கள் வைரலாகி வருகிறது. முன்னதாக சுயபாலின திருமணங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வந்திருந்தாலும் சிலர் அதை தாண்டி தான் வைத்திருக்கும் பொம்மையை திருமணம் செய்து கொள்வது, வளர்ப்பு பிராணியை திருமணம் செய்வது… இவ்வளவு ஏன்? தன்னை தானே திருமணம் செய்து கொள்வது போன்ற செயல்களால் உலகை வியப்புக்கு உள்ளாக்கியுள்ளனர்.

அந்த வகையில் ரஷ்யாவை சேர்ந்த 24 வயது பெண் ஒரு சூட்கேஸ் பெட்டியை காதலித்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக அந்த பெட்டியை காதலித்து வருவதாக கூறியுள்ள அவர், அடுத்த ஜூலை மாதம் அந்த சூட்கேஸ் பெட்டியையே திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அறிவித்துள்ளார். இப்படியே பொம்மை, சூட்கேஸை பெண்கள் திருமணம் செய்து கொண்டால் தங்கள் நிலைமை என்ன ஆகும் என வருத்தத்தில் உள்ளார்களாம் சிங்கிள் இளைஞர்கள்.