1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 10 அக்டோபர் 2022 (14:30 IST)

உக்ரைன் தலைநகர் மீது அடுத்தடுத்து வீசப்படும் ஏவுகணைகள்: பொதுமக்கள் அதிர்ச்சி!

Russia
கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் ரஷ்யா மீது போர் தொடுத்து வரும் நிலையில் இன்று திடீரென உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
உக்ரைன் தலைநகர் கீவ் மீது மூன்று இடங்களில் ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் ஏராளமான உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது
 
இருப்பினும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் காரணமாக கீவ் நகரில் உள்ள பொதுமக்கள் புத்தகத்துடன் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன
 


Edited by Siva