செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (22:31 IST)

ஜெனிவா உடன்படிக்கையை மீறிய ரஷ்யா. மேற்கு உலக நாடுகள் கண்டனம்

ரஷியா ராணுவத்திடம் இருந்து தப்பியு உக்ரைன் சிப்பாயின் தற்போதைய புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள  நிலையில் உலக நாடுகள் ரஷியா நாசிசத்தைக்கையில் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டி வருகிறது.


உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம்  7 மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனின் 4 பகுதிகளை ரஷ்ய வசமானதாக அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

உக்ரைன்  மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,  இரு தரப்பிலும், பல ஆயிரம் வீரர்களும், பொதுமக்களும்,  குழந்தைகளும் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 4 பகுதிகள் தங்கள் நாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Michael Dianov

இந்த நிலையில், ரஷ்ய ராணுவத்திடம் இருந்து தப்பிய மைகைலொ டியானோவ் என்ற உக்ரைன் வீரரின் அண்மைப் புகைப்படத்தை அந்த நாடு வெளியிட்டுள்ளது. அதில் அவரது தோற்றத்தைப் பார்த்து உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
Michael Dianov

மேலும், ரஷிய ஜெனிவா ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகக் கூறி,  அந்த நாடு அவ்வப்போது போர் மீறல்களை அம்பலப்படுத்தி வருகிறது. இதனால் ரஷ்யாவின் மீது பல பொருளாதாரக் கட்டுப்பாடுகள் வரலாம் என கூறப்படுகிறது.

 Edited by Sinoj