ரஷ்யா மீதான பொருளாதார தடையை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு

Vladimir Putin
Suresh| Last Updated: செவ்வாய், 23 ஜூன் 2015 (15:04 IST)
ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையை வரும் ஜனவரி மாதம் வரை, மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
இது குறித்து ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு உக்ரைன் பிரச்சனையில் ரஷ்யாவுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதற்காகவே எவ்வித விவாதமும் இன்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரஷ்யா மீது கொண்டு வரப்பட்ட பொருளாதார தடை அடுத்த மாதத்துடன் காலாவதியாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் 2016 ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :