உக்ரைனில் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவிப்பு
உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறி வரும் நிலையில், அவர்களை தடுத்து நிறுத்தியதாக ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு வைத்த நியையில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது..
உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் புதின் உத்தரவுப்படி ரஷ்ய படைகள் போர் 36 வது நாளாகப் போர் தொடுத்து வருகின்றனர்.
உக்ரைனில் தொடர் தாக்குதலா மரியுபோல் என்ற நகர் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இங்கு வசித்து வந்த 4 லட்சம் பேர் அகதிகளாக வெறியெறி வருகின்றனர். இன்னும் சுமார் 1.60 லட்சம் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்நிலையில் மரியுபோல் நகரில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறி வரும் நிலையில், அவர்களை தடுத்து நிறுத்தியதாக ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு வைத்த நிலையில், மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது.