செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2017 (16:10 IST)

தூங்குவதே வேலை: ரூ.9 லட்சம் சம்பளம்; எங்கு தெரியுமா?

பிரபல சீன உடல்நல ஊட்டச்சத்து நிறுவனமான ‘நாவ் பாய்ஜின்’ இந்த அரிய வேலை வாய்ப்பை வழங்குகின்றது. 


 
 
இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நிறுவனத்தின் பொருட்களைச் சோதிக்கத் துணைபுரிவார்கள். ஊட்டச்சத்துப் பொருளை உட்கொண்டு, தூக்கத்தின் தரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைச் சோதிக்க வேண்டும். பின்னர், அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
 
இந்த வேலை தப்போது சீனாவில் பிரபலமடைந்து வருகிறது. சீன இணையவாசிகளால் உலகின் மிக சொகுசான வேலை என்று இந்த வேலையை பாராட்டி வருகின்றனர்.