1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 5 ஜூலை 2017 (11:14 IST)

பழுதடைந்த ரோலர் கோஸ்டர் - அந்தரத்தில் தொங்கிய மக்கள் (வீடியோ)

இங்கிலாந்தில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டர் பழுதடைந்து பாதியிலேயே நின்றதால், அதில் பயணம் செய்தவர்கள் அந்தரத்தில் தொங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 


 

 
இங்கிலாந்தில் மைல் ஓக் என்ற பகுதியில்தான் அந்த பூங்கா உள்ளது. சம்பவத்தன்று 20க்கும் மேற்பட்டோர் அந்த ரோலர் கோஸ்டரில் பயணித்தனர். சுமார் 50 அடி உயரத்தில் தலைகீழாக சென்ற போது, அந்த ரோலர் கோஸ்டர் திடீரெனெ பழுதடைந்து அப்படியே நின்றுவிட்டது. இதனால் அதில் இருந்தவர்கள் தலைகீழா தொங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். அதன் பின் பழுது சரிசெய்யப்பட்டு அதிலிருந்து 20 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 
 
சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.