1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (16:55 IST)

''6 நாட்கள் கழித்து மீட்பு...'' கண்ணாமூச்சி விளையாடிய சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்!

bangladesh
வங்கதேச நாட்டைச் சேர்ந்த சிறுவனுக்கு  கண்ணாமூச்சி விளையாடியபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது.

வங்கதேச  நாட்டைச் சேர்ந்தவ சிறுவன்(15) ஒருவன் கண்ணாமூச்சி விளையாடியபோது, கண்டெய்னருக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் தூங்கி விட்டான்.

அந்தக் கண்டய்னர், கப்பலில் ஏற்றி  மலேசியாவுக்குச் செல்லும் கண்டய்னர் ஆகும். சிறுவன் கண் விழித்துப் பார்த்தபோது, தான் எங்கே இருக்கிறோம் என்பதே தெரியவில்லை.

6 நாட்கள் கழித்து  கப்பல் மலேசியாவை சென்றடைந்து அதிகாரிகள் கண்டெய்னரை திறந்தபோது, சிறுவனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சுமார் 2300 கிமீட்டர், 6 நாட்கள் பயணித்ததால் உடல்  நலம் பாதிக்கபட்ட சிறுவனை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.