1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 17 நவம்பர் 2018 (10:06 IST)

மீண்டும் பிரதமராக பதவியேற்கின்றாரா ரணில் விக்ரமசிங்கே ?

இலங்கையில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்ப நிலை நிலவி வரும் நிலையில் இன்று அல்லது நாளை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் பதவியேற்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இலங்கை பிரதமராக இருந்த ரணிலை திடீரென நீக்கிய அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமனம் செய்தார். ஆனால் சமீபத்தில் கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில் ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனால் நாடாளுமன்றம் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அல்லது நாளை மீண்டும் ரணில் பிரதமர் பதவியை ஏற்கவுள்ளதாக இலங்கையின் முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதற்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரணில் மீண்டும் பிரதமர் ஆனால் தான் ஒரு நாள் கூட அதிபர் பதவியில் இருக்க மாட்டேன் என்று சிறிசேனா ஏற்கனவே கூறியிருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.